சடப்பொருட்ளை தூய்மையானவை தூய்மையற்றவை (கலவைகள்) என பிரதானமாக இரு வகைப்படுத்தலாம். தூய்மையான பதாரத்தங்களாக மூலகங்களையும் சேர்வைகளையும் குறிப்பிடலாம்
மூலகங்கள் எனப்படுபவை பௌதிக அல்லது இரசாயனமுறை மூலம் மேலும் வேறு இயல்பைக் கொண்ட பதார்த்தமாகப் பிரிக்கமுடியாத குறித்த இயல்பைக் கொண்டவை ஆகும்.இதுவரை ஏறத்தாழ (120) மூலகங்கள் இனங்காணப்பட்டுள்ளன. இவ் ஒவ்வொரு மூலகமும் தனக்குரித்தான இயல்புகளைக் கொண்டுள்ளது.உதாரணமாக இரும்பு, அலுமினியம், கந்தகம் மற்றும் ஒட்சிசன் ஆகிய மூலகங்களை குறிப்பிடலாம்.
இரண்டு அல்லது பல மூலகங்கள் குறித்த விகிதத்தில் இரசாயன முறையில் சேர்ந்துள்ள ஏகவின தூயப்பதார்த்தம் சேர்வையாகும். சேர்வையின் இயல்புகள் அச்சேர்வையை உருவாக்கும் மூலகங்களின் இயல்புகளிலிருந்து வேறுபட்டிருப்பது விஷேட அம்சமாகும்.
கலவைகள் எனும் இப்பாட அலகானது கலவைகள் பற்றிய அடிப்படை கோட்பாடுகளை விளக்கும் விதத்தில் அமைந்துள்ளதுடன் இப்ப்பாட அலகில் பின்வரும் விடயங்கள் கலந்துரையாடப்படுகிறது
- கலவைகளின் வகைகள்
- கலவைகளின் அமைப்பு
- கலவைகளின் கூறுகளை வேறுபிரிக்கும் முறைகள்

Thanks sir
ReplyDelete